முகமறியா நட்பு
முகமறிந்தவை இகழறிந்தவை அகஞ்சிறுத்தவை
முகநூலவை முகமறைத்தவை அகம்பெருத்தவை
கவிரசித்தவை மேடையுடுத்தவை குப்பையடைந்தவை
புகழளித்தவை முகந்திறந்துவை மனவிருப்பமவை
முகநூலவை முகமறைத்தவை அகம்பெருத்தவை
கவிரசித்தவை மேடையுடுத்தவை குப்பையடைந்தவை
புகழளித்தவை முகந்திறந்துவை மனவிருப்பமவை
- சரவணபெருமாள்
விளக்கம்:
இகழறிந்தவை - இகழ்ந்து பேசப்பழகியவை
அகஞ்சிறுத்தவை - குறுகிய மனப்பான்மை உடையவை
முகநூலவை - முகநூல் அவை
அகம்பெருத்தவை - விரிந்த மனம் கொண்டவை
மேடையுடுத்தவை - மேடை கொடுத்தவை
அகஞ்சிறுத்தவை - குறுகிய மனப்பான்மை உடையவை
முகநூலவை - முகநூல் அவை
அகம்பெருத்தவை - விரிந்த மனம் கொண்டவை
மேடையுடுத்தவை - மேடை கொடுத்தவை
முகமறிந்த மனிதர்கள், என்னை இகழ்ந்து பேசத்தெரிந்த குறுகிய
மனப்பான்மை உடையவராகவே இருக்க, முகநூல் குழும அவைகளில், தம் முகம்
காட்டாமல் விரிந்த மனப்பான்மை உடையவர்கள், என்னுடைய கவியை ரசித்து,
குப்பையை அடைந்த என் கவிதைகளுக்கு, மேடையைக்கொடுத்தனர். அத்தகைய புகழை
அளித்த அவர்களது முகம் திறந்த வடிவில் இருக்க, அதாவது, நேரில் நான்
சந்திக்க வேண்டுமென்பதே என் மன விருப்பமாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment