விகடகவி-1
தேடாதே! தேமாதே! தேயாதே!
துவள்வது கலைக சீச்சீ!
மேளதாளமே, மாமா வினவி!
துவள்வது கலைக சீச்சீ!
மேளதாளமே, மாமா வினவி!
வினவி, மாமா மேளதாளமே!
சீச்சீ! கலைக துவள்வது
தேயாதே! தேமாதே! தேடாதே!
சீச்சீ! கலைக துவள்வது
தேயாதே! தேமாதே! தேடாதே!
- சரவணபெருமாள்
(அனைத்து சீர்களும் விகடகவிச்சொற்களாய் இயற்றப்பட்டுள்ளன.)
கரு:
தலைவனைப்பிரிந்து தவிக்கும் தலைவியை, சமாதானப்படுத்தும் விதமாய், விரைந்து மேளதாளத்துடன் பெண்கேட்டு வருவதாகவும், அதுவரை துவளாமல், கவலையுறாமல் இருக்க வேண்டுமாய் உரைப்பது போல் இயற்றியுள்ளேன்.
தலைவனைப்பிரிந்து தவிக்கும் தலைவியை, சமாதானப்படுத்தும் விதமாய், விரைந்து மேளதாளத்துடன் பெண்கேட்டு வருவதாகவும், அதுவரை துவளாமல், கவலையுறாமல் இருக்க வேண்டுமாய் உரைப்பது போல் இயற்றியுள்ளேன்.
முதல் பாடலின் பொருள்:
என்னைத்தேடாதே! தேன் மாதே! என்னையெண்ணித்தேயாதே!
துவள்வது வேண்டாம், கலைத்துவிடு; துவள்வது சீச்சீ எனத்தோன்றுகிறது.
விரைவில் மேளதாளமே, மாமனாகியா நான் உன்னைக்கேட்டு வரும் கருவியாக மாறும்.
துவள்வது வேண்டாம், கலைத்துவிடு; துவள்வது சீச்சீ எனத்தோன்றுகிறது.
விரைவில் மேளதாளமே, மாமனாகியா நான் உன்னைக்கேட்டு வரும் கருவியாக மாறும்.
(வினவி - வினவும் கருவி; கேட்கும் கருவி. கணித்தல் செயலை ஆற்றும் கருவி
கணினி என்பது போல், வினவும் கருவியாக வினவி எனும் சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது.)
இரண்டாம் பாடல்:
உன்னைப்பெண்கேட்டு வரும் கருவி(வினவி), மாமா அழைத்து வரும் மேளதாளமே! சீச்சீ! துவள்வது ஏனோ? கலைத்துவிடு!
என்னையெண்ணியே தேயாதே! தேன் மாதே! தேடாதே!
என்னையெண்ணியே தேயாதே! தேன் மாதே! தேடாதே!
No comments:
Post a Comment