மனசுக்குள் எப்படி வந்தாய்? - கிராமியக்கவிதை
சந்தைக்கு நான் போகும்போது
சடைய புடிச்சு இழுத்தவனே (சந்தை..)
கடையோரம் நானும் வந்தா
கண் ணடிச்சு கவுப்பவனே
இன்னொருத்தி கூட வந்தா
அவளயுந் தான் புடிப்பவனே
சடைய புடிச்சு இழுத்தவனே (சந்தை..)
கடையோரம் நானும் வந்தா
கண் ணடிச்சு கவுப்பவனே
இன்னொருத்தி கூட வந்தா
அவளயுந் தான் புடிப்பவனே
கொஞ்ச நஞ்ச சேட்டையா - நீ
செஞ்சுக் கிட்டு கெடக்க
எதுவும் எனக்கு புடிக்கல - பின்ன
எப்படி வந்த மனசுக்குள்ள
செஞ்சுக் கிட்டு கெடக்க
எதுவும் எனக்கு புடிக்கல - பின்ன
எப்படி வந்த மனசுக்குள்ள
சடங்குக்கு குச்சு கட்டி
கெடங்கு போட்ட நெஞ்சுக்குள்ள (சடங்கு..)
தடங்கலும் ஏதும் இல்ல
மாமென் மகென் நீயும்வர
என்னயத்தான் பாக்க வந்து
தங்கச்சிக்கும் தூதும் விட்ட
(கொஞ்ச நஞ்ச..)
கெடங்கு போட்ட நெஞ்சுக்குள்ள (சடங்கு..)
தடங்கலும் ஏதும் இல்ல
மாமென் மகென் நீயும்வர
என்னயத்தான் பாக்க வந்து
தங்கச்சிக்கும் தூதும் விட்ட
குளிக்கத்தான் நான் போக
ஒளிஞ்சிருந்து எட்டிப் பாத்த (குளிக்க..)
துணியோட நான் குளிக்க
மச்சான் நீயே ஏமாந்த
வந்தவர ஏன் விடணும்
மஞ்சவாசம் மோந்து போன
(கொஞ்ச நஞ்ச..)
ஒளிஞ்சிருந்து எட்டிப் பாத்த (குளிக்க..)
துணியோட நான் குளிக்க
மச்சான் நீயே ஏமாந்த
வந்தவர ஏன் விடணும்
மஞ்சவாசம் மோந்து போன
தண்ணி எடுக்கப் போகும்போது
கொடந் தூக்க வாரேங்குற (தண்ணி..)
கொடந்தூக்கி தர்ற சாக்குல
இடுப்புல தானே கிள்ளிப்புற
தடுமாற புடிக்கும் சாக்குல
இறுக்கித் தானே கட்டிக்கிற
(கொஞ்ச நஞ்ச..)
கொடந் தூக்க வாரேங்குற (தண்ணி..)
கொடந்தூக்கி தர்ற சாக்குல
இடுப்புல தானே கிள்ளிப்புற
தடுமாற புடிக்கும் சாக்குல
இறுக்கித் தானே கட்டிக்கிற
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment