தங்கையின் ஞாபகம்...
எங்கே போனாயம்மா நீ...?
எப்படி இருக்கிறாய்...?
போனால் திரும்பாத
இடத்திற்கு போனாயே...!
என் செல்லமே...!
பொங்கி வழியும் சிரிப்பில்
பொத்தென்று விழும் மனம்...!
பொத்தி பொத்தி வளர்க்க
பொசுக்கென்று போனாயே...!
தங்கமே! செல்லமே!
தனியே போனாயே....!
மந்தைக்குள் நான் இருந்தும்
தனி ஆடாய் ஆனேனே....!
ஓடி வந்து கழுத்தைக்கட்ட
கைவளையல் ஓசையம்மா...!
சிலுசிலுவென சத்தமிடும்
கன்னத்தில் கன்னம் முத்தமிடும்...!
அண்ணே! என்றழைக்க
ஆலயமணி அடிநெஞ்சில்...!
அடி போடி!
அதை எனக்கு
நிலையாது செய்துப் போனாய்...!
கைபேசி புகைப்படத்திற்கு
அங்கும் இங்கும் திரும்பி
அழகழகாய் காட்சி தர
அண்ணன் கண்ணும் பட்டுப்போச்சோ..!
அம்மா! என் அன்பே..!
நீ பட்டுப் போனாயே....!
என்ன சொல்லி அழைத்தான்
எமன்?
என் கண்ணே! ஏமாந்தாயே...!
யாரழைத்தாலும்
போகாதே! போகாதே!
என்றே சொன்னேனே!
எமன் அழைக்கப் போய்விட்டாயே...!
என் செல்லமே...!
கண்ணே!
என்னருகில் இருக்கிறாயோ...?
அண்ணே!
என்றே அழைக்கிறாயோ....!
கேட்கவில்லையே! செல்லமே...!
முத்தே! என் பட்டே!
மூச்சிருந்தும் பேச்சின்றி போனேனே....!
பிஞ்சென்றும் பாராது
கல்நெஞ்சன்
கயிறு போட்டானே...!
அண்ணன் வருவான்!
உனையடிக்க என்று
வீரம் பேசியிருப்பாயோ?
காப்பாற்றண்ணே!
என்று கதறியிருப்பாயோ?
இந்த ட்ரெஸ்ல போட்டா எடுனே!
அந்த ட்ரெஸ்ல போட்டா எடுனே!
சொல்லிச்சொல்லி நச்சரித்தாயே!
நான் போகப்போறேன்;
ஞாபகார்த்தமா
போட்டோ எடுத்து வச்சுக்கடானு
எடுக்கச்சொன்னியா....! பாப்பா.....!
ஒத்தையிலே
இருக்க மாட்டாயே, தங்கம்....!
ஒண்ணா என்னயும்
கூட்டிப்போடா அம்மு...!
கோழியவும்
தட்டுல சாப்ட விட்ட...!
நாயவும்
ஒண்ணா தின்ன விட்ட...!
என்ன மட்டும்
இப்போ
சாப்ட முடியாம ஆக்கிட்டியே...!
கீழே இடறி விழுந்தாலும்
அலறித்துடித்தேன் நானே!
அடி உன்மேலே நெருப்பிட
பார்த்தேனே! என் நிலவே!
கருகிய அமாவாசை
ஆகிப்போனாயே...!
பூ மேலே
தீ வைத்தோமே...!
சோறு போட்டு
முன்னே வைக்க,
முட்டிபோட்டே
முன்னே நான் அமர
அண்ணே சாப்ட்டியாண்ணே கேப்பியே!
அம்மா! அம்மா !
உனக்கிப்போ பசிக்கலையா?
இந்நேரம்
சோறே சோறுண்ணு கெடப்பியே...!
பாப்பா! என் பட்டுக்குட்டி!
பக்கத்துல இருந்தா
எனக்கு கேட்குற மாதிரி
அண்ணேனு கூப்டுடா செல்லம்....!
பாப்பா.....!
- சரவணபெருமாள்
எங்கே போனாயம்மா நீ...?
எப்படி இருக்கிறாய்...?
போனால் திரும்பாத
இடத்திற்கு போனாயே...!
என் செல்லமே...!
பொங்கி வழியும் சிரிப்பில்
பொத்தென்று விழும் மனம்...!
பொத்தி பொத்தி வளர்க்க
பொசுக்கென்று போனாயே...!
தங்கமே! செல்லமே!
தனியே போனாயே....!
மந்தைக்குள் நான் இருந்தும்
தனி ஆடாய் ஆனேனே....!
ஓடி வந்து கழுத்தைக்கட்ட
கைவளையல் ஓசையம்மா...!
சிலுசிலுவென சத்தமிடும்
கன்னத்தில் கன்னம் முத்தமிடும்...!
அண்ணே! என்றழைக்க
ஆலயமணி அடிநெஞ்சில்...!
அடி போடி!
அதை எனக்கு
நிலையாது செய்துப் போனாய்...!
கைபேசி புகைப்படத்திற்கு
அங்கும் இங்கும் திரும்பி
அழகழகாய் காட்சி தர
அண்ணன் கண்ணும் பட்டுப்போச்சோ..!
அம்மா! என் அன்பே..!
நீ பட்டுப் போனாயே....!
என்ன சொல்லி அழைத்தான்
எமன்?
என் கண்ணே! ஏமாந்தாயே...!
யாரழைத்தாலும்
போகாதே! போகாதே!
என்றே சொன்னேனே!
எமன் அழைக்கப் போய்விட்டாயே...!
என் செல்லமே...!
கண்ணே!
என்னருகில் இருக்கிறாயோ...?
அண்ணே!
என்றே அழைக்கிறாயோ....!
கேட்கவில்லையே! செல்லமே...!
முத்தே! என் பட்டே!
மூச்சிருந்தும் பேச்சின்றி போனேனே....!
பிஞ்சென்றும் பாராது
கல்நெஞ்சன்
கயிறு போட்டானே...!
அண்ணன் வருவான்!
உனையடிக்க என்று
வீரம் பேசியிருப்பாயோ?
காப்பாற்றண்ணே!
என்று கதறியிருப்பாயோ?
இந்த ட்ரெஸ்ல போட்டா எடுனே!
அந்த ட்ரெஸ்ல போட்டா எடுனே!
சொல்லிச்சொல்லி நச்சரித்தாயே!
நான் போகப்போறேன்;
ஞாபகார்த்தமா
போட்டோ எடுத்து வச்சுக்கடானு
எடுக்கச்சொன்னியா....! பாப்பா.....!
ஒத்தையிலே
இருக்க மாட்டாயே, தங்கம்....!
ஒண்ணா என்னயும்
கூட்டிப்போடா அம்மு...!
கோழியவும்
தட்டுல சாப்ட விட்ட...!
நாயவும்
ஒண்ணா தின்ன விட்ட...!
என்ன மட்டும்
இப்போ
சாப்ட முடியாம ஆக்கிட்டியே...!
கீழே இடறி விழுந்தாலும்
அலறித்துடித்தேன் நானே!
அடி உன்மேலே நெருப்பிட
பார்த்தேனே! என் நிலவே!
கருகிய அமாவாசை
ஆகிப்போனாயே...!
பூ மேலே
தீ வைத்தோமே...!
சோறு போட்டு
முன்னே வைக்க,
முட்டிபோட்டே
முன்னே நான் அமர
அண்ணே சாப்ட்டியாண்ணே கேப்பியே!
அம்மா! அம்மா !
உனக்கிப்போ பசிக்கலையா?
இந்நேரம்
சோறே சோறுண்ணு கெடப்பியே...!
பாப்பா! என் பட்டுக்குட்டி!
பக்கத்துல இருந்தா
எனக்கு கேட்குற மாதிரி
அண்ணேனு கூப்டுடா செல்லம்....!
பாப்பா.....!
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment