Friday, December 8, 2017

தமிழே துணை

தமிழே துணை
மனமேற்கும் பெருமையோ மனிதப் பிறப்பு
தானமாய் கிடைத்த தமிழ்ப் பிறப்பே
திமிர் தருதே தமிழ் வரத்தினும்
தமிழ்ப் புனைவே  தவம்

கொடுத்தாயே ஆக்கல் கொடையாய் தமிழே
கடுகளவு கவியை கவிக்க விழைந்தோம்
பண்பாடி பாராட்டும் பரிசும் விழையோம்
எண்ணிக்கை ஆகட்டும் எமது

தனிமொழியே வயதுகூட தளரல் இலையே
கனிமொழியே இனித்தாய் கசந்த காயிலையே
தனியோசை ஊர்தோறும் தனிப்பேச்சு பிறசேர்ந்தும்
தனிநிலை தவறா தமிழ்

கிராமப் பாட்டும் கிலுகிலுக்கும் ஆங்கே
வராத துள்ளல் வருந்தமிழ் கிராமம்
காதலில் குறையுமோ கவி புரட்சியும்
தாதலில் நிறைவே தமிழ்

படித்தவுடன் ஒன்று பகிர்வாய் உள்ளேறி
பிடிக்க ஒருபொருள் பிய்ப்பாய் நேராய்
படிக்க ஒன்று பகரொன்று நேர்மாற
நடித்தாய் வித்தைகள் நல்க

இரட்டையாய் கூடி இரட்டைக் கிளவி
வரபிரி பொருளில வருந்தொடர் அடுக்கென
பிரித்தால் பொருளுள பிறப்பே சிறப்பு
உரித்தே வித்தையோடு உளாய்

சங்கம் தந்து சந்தம் தந்து
அங்கம் சிலிர்த்த அரங்கேற்றம் கவிந்து
தங்கத் தாமரை தடாகம் கொண்டோன்
அங்கும் ஆட்டம் அவன்

சொல்லவே தீராது சொச்சம் இருக்கும்
வல்லதே தமிழ் வனப்பசுமை வானுயரம்
பெருமிதம் கொண்டது பெருமிதம் கொண்டேன்
அருந்தமிழ் நாட்டில் அரும்பு

எனக்காய் சிலகவி எடுத்தே போட்டாள்
எனதே எனச்சொல எனக்கே கூச்சம்
கொடுத்தவள் கொடுக்க கொண்டு வந்தேன்
விடுக்க அரங்கும் விட்டாள்

தந்தவள் அவளே தட்டல்கள் எனக்கோ
ஈந்தவள் இழுத்தே ஈயடா உனதாய்
உரைத்தெனை கூடுபாய்ந்து ந்த நிற்கிறேன்
கரையிடு கூச்சம் கவிக்க

தமிழே துணைகொண்டு தரவந்தேன் அரங்கமே
எமிலே தவறேதும் எட்டுமோ பொறுப்பீர்
போட்டியுமில என்னைப் போன்றொரிடம் தமிழ்கற்க
சாட்டி அனுப்பினளோ சாக்காய்

கவிஞோரே வாழ்த்துக்கள் கவியுங்கள் சிறப்பாய்
செவிக்கனி விருந்தாய் செந்தமிழ் வாழ்த்தி
எழுதிட கைகோர்ப்போம் எங்கும் தமிழே
விழுதுகள் போடுக விழுந்து

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...