Wednesday, November 1, 2017

கால்மிதி தொட்ட பிஞ்சு

கால்மிதி தொட்ட பிஞ்சு



கெண்ட காலை தரையில் சாய்த்து
           சுண்ட வெயிலில் நான் அமர்ந்தேன்
திண்ட வாயில் பிச்சை கேளேன்
           கண்ட காலில் உழைத்தே வாழ்வேன்
உண்ட கையில் தொடுநிலை யானேன்
           கண்ட இடத்தில் மிதியா செருப்பே


வறுமை வரவே எனையே மிதித்தே
           பொறுமை யிழந்தே வந்தாய் கிழிந்தே
கல்லடி பட்ட விரிசலா கண்ணே
           முள்ளடி பட்ட கிழிசலா செருப்பே
உள்ளடி சுத்தி யாணி வைத்தே
           செல்லடி யாயுட் கூட்டித் தைத்தே


மரமேல் மாட்டிய பையை நிரப்ப
           மரம்போல் காய்த்து பணம் இல்லை
இலவச கல்வி என்றால் கூட
           இதென்று அதென்று செல வுண்டே
ஆதே அய்யா அமர்ந்தே னிங்கே
           ஆருக்கும் செருப்பிழை தீர வாரும்


ஆண்டவன் முன்னே அனைவருஞ் சமம்
           புனைந்தவன் எவனோ முன்னே வரும்
கண்டது யெங்கே சொலும் சொலும்
           எனைத்தே பாரும் யெங்கே சமம்
எல்லார்க்கு மெல்லாந் தருவா னென்றால்
           ஏழையும் எமும் எப்படி வந்தோம்



- சரவணபெருமாள்
 
( தமிழ்ப்பட்டறை குழுமம் கொடுத்த படக்கவிதை தலைப்புக்காக எழுதிய கவிதை)

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...