Friday, October 6, 2017

நியாய விலை கடை

நியாய விலை கடை



ஒருலிட்டர் முகவை
முக்காலிட்டர் முகக்கிறது
மீதமுள்ள மண்ணெண்ணெய்
மேப்பையில் வழிகிறது

துலாக்கோல் தடுமாற்றம்
சீனித்தட்டு எழுகிறது
தூக்கும்கையில் துட்டுவிழ
தாழும்தட்டு மட்டமாகிறது

பலகுடும்ப பசியரிசி
ஒருகுடும்ப பசியாகிறது
விலையில்லா அரிசிமிச்சம்
விலையாகி ருசிபோக்கிறது

இருப்பில்லா பருப்பு
பாதிக்கதவானால் இருக்கிறது
பாமாயில் வரவேற்பு
இன்றுபோய் நாளையாகிறது

கடைப்பெயர் கண்டபின்
காரணம் தெரிகிறது
நியாயம் விற்கப்படுவதாலோ
நியாய விலை கடையாகிறது

                                               - Written By,
                                                 சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...