Tuesday, October 3, 2017

பாடல் கவிதை 2 - விவசாயி பாடும் பாட்டு

ராகம்:
படம்      :  பணத்தோட்டம்
பாடல்   : குரங்கு வரும் தோட்டமடி



மனித னென்றே சொல்லுதடி - உடல்தோற்றம்
தலைவ னென்றே சொல்லுதடி - ஒருகூட்டம்

மக்களுக்குத் தெரியுமடி - அவன்தோற்றம்
அங்கே வேசம் வெளுத்தே ஆகிவிடும்
வெளித்தோற்றம் வெளித்தோற்றம் வெளித்தோற்றம்

விவசாயம் காப்போமென்று
வீதிதோறும் சொல்லிச்சொல்லி
விளைநிலத்தை அழிப்பதேனடி - கண்ணம்மா
வெளித்தோற்றம் வெளுத்ததேயடி     ( விவசாயம்.. )

ஏர்பிடித்து உழுத இனம்
பசிபோக்கி மகிழ்ந்த சனம்                     ( ஏர்பிடித்து.. )
பஞ்சத்திலே விழுந்ததேனடி - கண்ணம்மா
ரேசன்கடை வரிசைதானடி - கண்ணம்மா
அரிசிக்காக நிற்பதேனடி
                                                                               ( விவசாயம்.. )


எத்தனைபேர் மாறிமாறி  
நாற்காலியைத் தேய்த்தாலும்              ( எத்தனைபேர்.. )
மக்கள்நிலை மாறவில்லையே - என் கண்ணம்மா
விவசாயம் செழிக்கவில்லையே - கண்ணம்மா
விவசாயி சிரிக்கவில்லையே              
                                                                               ( விவசாயம்.. )

மீத்தேனுடன் ஹைட்ரோகார்பன்
வயல்வெளியில் விளைந்தாலும்       ( மீத்தேனுடன்.. )
வயிற்றுப்பசி ஆற்றாதடி - கண்ணம்மா
மீத்தேன் சோறு போடாதடி - கண்ணம்மா
சோறுபோட்ட நிலம்போச்சடி
                                                                              ( விவசாயம்.. )


நெல்நாற்று நெடுநெடுவென
நெடுந்தூரம் வயல்காடு                          ( நெல்நாற்று.. )
வீட்டுமனை ஆனதேனடி - கண்ணம்மா
காடுமேடு கரைந்ததேனடி - கண்ணம்மா
கட்டிடங்கள் காய்த்ததேனடி
                                                                             ( விவசாயம்.. )


பறவைக்கெல்லாம் வீடுஅல்ல
நட்சத்திர விடுதிமரம்                              ( பறவை.. )
வெட்டுப்பட்டு போனதேனடி - கண்ணம்மா
மழைநின்று போனதேனடி - கண்ணம்மா
வெள்ளாமையும் வெறித்ததேனடி
                                                                             ( விவசாயம்.. )

 குடிப்பதற்கு தண்ணீரில்லை
தண்ணீர்பாய்ச்ச தண்ணீரில்லை       ( குடிப்பதற்கு.. )
தொழிற்சாலை உரிமையானதே - கண்ணம்மா
ஆற்றுத்தண்ணீர் புட்டியில்போனதே - கண்ணம்மா
குளிர்பானம் ஆற்றில்ஊறுதே 
                                                                             ( விவசாயம்.. )


காசுமட்டும் சோறுபோடுமா
காசைவிதைத்தால் முளைத்திடுமா   ( காசுமட்டும்.. )
காசுக்காக வேர்த்ததில்லையே - கண்ணம்மா
வேர்வையிலே விளைந்தநெல்லையே - கண்ணம்மா
வாங்கித்தின்றும் நன்றியில்லையே
                                                                           ( விவசாயம்.. )


நாடெல்லாம் சுற்றிவந்தும்
நடுத்தெருவில் நானிருந்தால்          ( நாடெல்லாம்.. )
நம்நாடு முன்னேறிவிடுமா - கண்ணம்மா
மேடைப்பேச்சு செல்லாக்காசம்மா - என் கண்ணம்மா
மேடைப்பேச்சு செல்லாக்காசம்மா      
                                                                          ( விவசாயம்.. )


                                                        - Written By
                                                          சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...