Thursday, March 2, 2017

என் சுவாசக்காற்றே!

என் சுவாசக்காற்றே!


அன்புத்தோழி தான், அவள்...!
ஆனாலும்,
அவளை நினைத்தால்
மாறிப்போகிறது மனம்,
பனிவிழும் மலர்வனம் போல...!

கவிதைகள் கேட்கிறாள், என்னிடம்..!
அழகான என் கவிதைகள்
தோல்வியடைகின்றன
அவளை வர்ணித்த வார்த்தைகளின்
சிறப்பு குறைந்து...!

என்னைப் பிடித்திருக்கிறதா
என்றே கேட்கிறாள் அடிக்கடி..
அவளுக்கு எப்படித் தெரியும்...?
என் மனதில்
முப்பொழுதும் 
அவள் கற்பனைகள் தான் என்று...!

ஒரு நிமிட வாய்ப்புதான்,
அவளைப்பார்க்கும் சந்தர்ப்பம்!
அது ஒருசில நாள் தூக்கத்தையே
கெடுத்து விடுகிறது!

ஒவ்வொரு முறை
எழுந்து பார்க்கும்போதும்
ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது...!
என் அருகில்
அவள் வந்தது,
கனவென்று ஆனபின்பு...!

வாழ வைக்கும் தெய்வம் என்று
என்னைப் புகழ்கிறார்,
செல்போன் கடை உரிமையாளர்...!
அவளிடம் பேச
அடிக்கடி ரீசார்ஜ் செய்வதால்...!

வானில் 
நட்சத்திரங்கள் 
குறைந்தது போல் உணர்ந்தேன்..!
தேட முயன்றபோது
கண்டுபிடித்தேன்...!
கண்களுக்குள் வைத்திருக்கிறாள்...!
"திருட்டுப்பயபுள்ள!"

முத்துத் தேடி
கடலுக்குச் செல்பவர்கள் 
முட்டாள்கள்...!
முப்பத்திரண்டு முத்துக்களை
உதட்டின் பின்னால்
ஒளித்து வைத்திருக்கிறாள்...!

கன்னங்கள்
பிரம்மனின் கலைத்திறனுக்கு
எடுத்துக்காட்டு!
அவற்றை
முத்தங்களால் தீண்ட விருப்பமில்லை;
கிள்ளிப்பார்க்க
விரல்கள் துடிக்கின்றன...!

தோழிதான் அவள்..!
ஆனாலும் நேசிக்கிறேன்...
என் சுவாசக்காற்றே..!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...