Thursday, March 2, 2017

நான் கண்ட நோயாளிகள்

நான் கண்ட நோயாளிகள்

இல்லாதான் கண்டும்
நில்லாத உடையோன், குருடன்....

ஈயென யாசித்தும்
இரவாத பணத்தோன், செவிடன்....

பொல்லாதன பார்த்தும்,
வாதிடா பொறையோன், ஊமை....

வீழ்ந்தோனை தூக்க,
கைநீட்டான் கரங்கள், முடம்....


விபத்துகள் கண்டுமுதவ

விரையான் கால்கள், ஊனம்....

மாற்றான் துயர்பார்த்து,
இன்பம் உற்றான், மனநோயாளி....

மாற்றான்க்கு துன்பமிட்டு
இன்பம் எடுத்தான், பைத்தியம்..... 


                                             Written by,
                                    சரவண பெருமாள்.

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...