Thursday, March 2, 2017

குழந்தை தொழிலாளி

குழந்தை தொழிலாளி

(A Feel of a child labor from building construction)


குழந்தை வடிவில் தொழிலாளி நான்
ஏக்கம் ஏராளம்;
சொல்வேன் தாராளம்

வலது கன்னத்தில்
தாய் தந்த முத்தத்தின் ஈரமே
இன்னும் காயவில்லை - அதற்குள்
சிமெண்ட் கறை
இடது கன்னத்தை ஈரமாக்கிவிட்டது

வெயிலில் நின்றால்
தாங்காது எனக்கு – இன்று
ஐந்து நிமிடம் நின்றேன் – என்
நிழலில் அமர்ந்த
பட்டாம்பூச்சி இளைப்பாற  - தினமும்
வெயில்பட்ட இடம்தான் கிடைக்கிறது
நானமர்ந்து இளைப்பாற

திருடக்கூடாது என்றாள் தாய்
வேடனிடம் கிளியொன்றை திருடினேன் – அதனை
கூண்டிலிருந்து விடுவிக்க
ஏங்கித்தான் கிடக்கிறேன்
யார் வருவார் – என்னை
வறுமக்கூண்டில் விடுவிக்க

மாறவில்லை
மழலைச்சொல் நாவிலே
சிந்தாமல் அடக்கியும்
கண்ணீர்த்துளி கண்ணிலே
இளமையில் கல்
வாராதோ என் வாழ்விலே
நடந்தால் அது
வறுமையின் கோரச்சாவிலே

கடவுள் தந்த இளமைவரம்
கண்ணீராய் கரைகிறது
தொழில்தேடி
இதற்குமேல்
எழுத நேரமில்லை
அடுத்த வேலை வந்துவிட்டது
எனைத்தேடி

               - Written By
                சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...