Thursday, March 2, 2017

என் சுவாசக்காற்றே!

என் சுவாசக்காற்றே!


அன்புத்தோழி தான், அவள்...!
ஆனாலும்,
அவளை நினைத்தால்
மாறிப்போகிறது மனம்,
பனிவிழும் மலர்வனம் போல...!

கவிதைகள் கேட்கிறாள், என்னிடம்..!
அழகான என் கவிதைகள்
தோல்வியடைகின்றன
அவளை வர்ணித்த வார்த்தைகளின்
சிறப்பு குறைந்து...!

என்னைப் பிடித்திருக்கிறதா
என்றே கேட்கிறாள் அடிக்கடி..
அவளுக்கு எப்படித் தெரியும்...?
என் மனதில்
முப்பொழுதும் 
அவள் கற்பனைகள் தான் என்று...!

ஒரு நிமிட வாய்ப்புதான்,
அவளைப்பார்க்கும் சந்தர்ப்பம்!
அது ஒருசில நாள் தூக்கத்தையே
கெடுத்து விடுகிறது!

ஒவ்வொரு முறை
எழுந்து பார்க்கும்போதும்
ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது...!
என் அருகில்
அவள் வந்தது,
கனவென்று ஆனபின்பு...!

வாழ வைக்கும் தெய்வம் என்று
என்னைப் புகழ்கிறார்,
செல்போன் கடை உரிமையாளர்...!
அவளிடம் பேச
அடிக்கடி ரீசார்ஜ் செய்வதால்...!

வானில் 
நட்சத்திரங்கள் 
குறைந்தது போல் உணர்ந்தேன்..!
தேட முயன்றபோது
கண்டுபிடித்தேன்...!
கண்களுக்குள் வைத்திருக்கிறாள்...!
"திருட்டுப்பயபுள்ள!"

முத்துத் தேடி
கடலுக்குச் செல்பவர்கள் 
முட்டாள்கள்...!
முப்பத்திரண்டு முத்துக்களை
உதட்டின் பின்னால்
ஒளித்து வைத்திருக்கிறாள்...!

கன்னங்கள்
பிரம்மனின் கலைத்திறனுக்கு
எடுத்துக்காட்டு!
அவற்றை
முத்தங்களால் தீண்ட விருப்பமில்லை;
கிள்ளிப்பார்க்க
விரல்கள் துடிக்கின்றன...!

தோழிதான் அவள்..!
ஆனாலும் நேசிக்கிறேன்...
என் சுவாசக்காற்றே..!

- சரவணபெருமாள்

மணமகனாய் வருகிறேன்

மணமகனாய் வருகிறேன்




பத்திரிக்கை கொடுத்து
திருமணத்திற்கு அழைத்தாள்
மணமகனாய் அழைத்தால்
வருகிறேன் என்றேன்

-    Written By
சரவணபெருமாள்

எதிர்பார்ப்பா? யதார்த்தமா?





எதிர்பார்ப்பா? எதார்த்தமா?


நான்
எதையும்
எதிர்பார்ப்பதில்லை!
காரணம்,

எதிர்பார்ப்பது

எதுவும்
நடப்பதில்லை

ஆனாலும்
எதிர்பார்க்காமல் இருக்கமுடிவதில்லை
இவள் நமக்காகத்தானோ என்று
இது எதிர்பார்ப்பா? எதார்த்தமா? 
அதுவும் தெரியவில்லை


                                                                     Written by,
                                                                 சரவண பெருமாள்.

அதிகம்

அதிகம்






அவளிடம்
பேசிமுடித்த வார்த்தகளைவிட
பேச நினைத்த வார்த்தைகள் அதிகம்
எழுதிக்கொடுத்த வார்த்தைகளைவிட
எழுதி வைத்த வார்த்தைகள் அதிகம்

-    Written By
சரவணபெருமாள்

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...