Friday, April 28, 2017

சாப்பாட்டுக்கு வழி என்னடியம்மா

சாப்பாட்டுக்கு வழி என்னடியம்மா






ஐந்து மணிக்கே விழிப்பேன்
 அலறும் கடிகாரம் இல்லை
"கிக்கீ கிக்கீ" கிளியின் சத்தம்
"குக்கூ குக்கூ" குயிலின் பாட்டு
"கொக்கரக்கோ" சேவலின் கூவல்
 சுப்பனுக்கோ நாட்டுப்புறம் நாவில்

வைகறை நேரம் ஏர்சுமந்து

           வரப்போரம் வழி நடைநடந்து
உழவனின் தோழன் மாடிரண்டு
            உழுதிட முனைந்தேன் ஏர்பிணைந்து

யாம் காலடிவைத்தால் வயலோரம்

            யாருக்கும் யாவுக்கும் வயிறாறும்
உச்சந்தலையில் சூரியன் மிதிக்க
            உள்ளங்காலை நிலத்தன்னை சுமந்தாள்
இளைப்பாற சாய்கின்ற வரப்போரம்
            நிலத்தன்னை மடிதான் நினைப்போரம்

மணலை விலக்கினேன் ஆற்றங்கரையில்

           ஊறுது தண்ணீர் சிச்சிறுசுனையில்
மண்டியிட்டு தண்ணீர் குடித்தேனா
           மாராப்பை  விலக்கிப் பால்குடித்தேனா
அடடா ஒரு உண்மை
           புவியும் ஒரு அன்னை

பஞ்சத்தில் திளைத்தும்

பகட்டுக்கு பருத்தி போட்டேன்
பசித்தும் புசியாது
பஞ்சணைக்கு பஞ்சளித்தேன்

எங்கும் எதிலும் ஆக்கியானுக்கே மதிப்பு
விதியே கதியா?
ஆள்பவன் சதியா?
விற்போனுக்கு வரவேற்பு
பிதட்டோனுக்கு அப்பொறுப்பு
விளைவித்தவன் மதிப்பு
மறுப்பு

போதாதென்று,


கைபேசி கோபுரம் கட்டமைத்தான்

கதிர்வீச்சு தானாய் கட்டவிழ்ந்தது
கண்ணுக் கழகான சிட்டழிந்தது
படபட பட்டாம்பூச்சி படையழிந்தது
கவிதைக்கு இரையாகும் கிளியைக்காணோம்
இசைக்குப் பெயராகும் குயிலைக்காணோம்

விளைநிலத்தில் ளகரம் பெயர்ந்து

விலைநிலம் ஆகிப் போனதம்மா
வீதியிரு மருங்கில் மரங்கள்சாய்ந்து
நான்கு வழிச்சாலை ஆனதம்மா
தோண்டினாலே தண்ணீர்வரும் நிலைமாறி
ஆழ்துளை போட்டுறிந்து காற்றம்மா
மரங்களை அழித்து மழை அழித்து
மழை வரம் கேட்டு யாகமம்மா

இனிவரும் காலமே அம்மா அம்மா
இப்படியே போனால் எப்படியம்மா
சாப்பாட்டுக்கு வழி என்னடியம்மா


                                                 - Written By,

                                                   சரவணபெருமாள்


No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...