Tuesday, May 30, 2017

என் பாதைகள் மட்டும் இருளாகிப்போனது

என் பாதைகள் மட்டும் இருளாகிப்போனது






வெண்ணிலா ஒன்று  
தொடர்ந்து வந்தது  
வெள்ளொளி மட்டும் 
கண்ணோடு நின்றது  
மேகங்கள் மறைத்ததா?
கண்ணிமைகள் மறைத்ததா?
என் பாதைகள் மட்டும் இருளாகிப்போனது


புல்நுனியிலே சிறு பனித்துளி
 
வீழாதடி அந்த ஒருதுளி  
அதுபோலவே என் காதலி  
உன்னை நெஞ்சுக்குள் வைத்தேன்
மறவாமல் நினைத்திருந்து  
நினைத்தாலே இனிக்கும் என்றுணர்ந்தேன்
 

கால் நகன்றுமே நம் காலடி  
அழியாமலே சில மணித்துளி  
மணலிலே உயிர் வாழ்ந்திடும்  
நகன்றுமே சில நிமிடங்கள்
நகராமலே உன் பிம்பங்கள்
கண்ணிலே வாழ்ந்திருக்கும்  
காட்சிப்பிழைகளை உருவாக்கும்
 
கல்லறை மீது பூக்கும் பூக்கள்
தனியொரு வாசம் வீசாதே
நீ இன்றி வாழும் காலம் கூட  
உன் நினைவின்றி நகராதே  
எத்தனை காலம்?  
எத்தனை பாவை?  
தடுமாறினும் தடம் மாறாது
சிலர் வருவதும் போவதும்  
உன் நினைவைச்சேர்ந்தது  
மறந்தால் தானே  
நினைவென ஒன்று இருப்பது
 
பேசுவதில் பல மொழி
சைகையில் சில மொழி  
நமக்குள் மௌனம் மட்டுமே மொழி
சத்தமே இல்லாமல்  
ஒலித்துக்கொண்டே இருக்கும்
"இதயமே நீயடா  
இருக்கிறேன் நானடா  
நீ சொன்ன இந்த வார்த்தைகள் மட்டும்
 

அந்த மௌனத்தின் நடுவில்  
தேடிக்கொண்டிருப்பேன்
என்னை விட்டுப்போன வெண்ணிலாவை

                            Written by,
                            சரவண பெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...