மரம்
மனிதன் வாழவே ஓ…
மடிந்து போனதே
மனிதன் வாழவே ஓ… மடிந்து போனதே
நிழல்தரும் மரமெல்லாம் அறுத்து போட்டதால்
மனிதன் வாழவே ஓ… மடிந்து போனதே
நிழல்தரும் மரமெல்லாம் அறுத்து போட்டதால்
மழை இல்லை பயிரும்
இல்லை
ரெண்டும் இன்றியே
பஞ்சத் தொல்லையே
மழை இல்லை பயிரும்
இல்லை
ரெண்டும் இன்றியே
பஞ்சத் தொல்லையே
மனிதன் வாழவே ஓ…
மடிந்து போனதே
சாலை ஓரம் உயர்ந்த
மரமெல்லாம் போச்சே
நான்கு வழிச் சாலை
அரளிச்செடி ஆச்சே
நெல் முளைத்த பூமி
அனைத்திலும் வெற்றிடம் ஓ… வெற்றிடம்
காண வில்லை குளங்கள்
எங்கிலும் கட்டிடம் ஓ… கட்டிடம்
சோறு விளைந்த பூமி
அது நோயில் விழுந்ததே
சோறு விளைந்த பூமி
அது நோயில் விழுந்ததே
மனிதன் செயற்கை சொன்ன பாடம் பஞ்சமே
மனிதன் செயற்கை சொன்ன பாடம் பஞ்சமே
மனிதன் வாழவே ஓ…
மடிந்து போனதே
மனிதன் வாழவே ஓ…
மடிந்து போனதே
சிட்டு பட்டாம்
பூச்சி இனங்கள் எங்கே?
கை பேசி கோபுரம்
அழித்தது இங்கே!
ஆடம்பர வாழ்க்கை அழித்ததே இயற்கை நம் இயற்கை
ஆடம்பர வாழ்க்கை அழித்ததே இயற்கை நம் இயற்கை
உண்ணுகின்ற உணவு
உற்பத்தி செயற்கை நம் செயற்கை
மூச்சுக் காற்றும்
மழையும் தரும் மரங்கள் நடுவோமே
மூச்சுக் காற்றும்
மழையும் தரும் மரங்கள் நடுவோமே
இயற்கை மீட்டே
எதிர் காலம் காப்போமே
மனிதன் வாழவே ஓ…
மடிந்து போனதே
மனிதன் வாழவே ஓ…
மடிந்து போனதே
நிழல்தரும் மரமெல்லாம்
அறுத்து போட்டதால்
மழை இல்லை பயிரும்
இல்லை
ரெண்டும் இன்றியே
பஞ்சத் தொல்லையே
மனிதன் வாழவே ஓ…
மடிந்து போனதே
- சரவணபெருமாள்
ராகம்:
ராகம்:
படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
பாடல்: கடவுள் உள்ளமே
No comments:
Post a Comment