Saturday, September 16, 2017

பேரழகி

பேரழகி

நனாவில் தாட்டியமேது?
கனாவில் நாட்டியமாது!
கலைத்தாள் மூடிய கண்களை!
நடுராத்திரியில் நான் முழித்தேன்!
நடுவானில் நீ முழித்தாய்!

வா வெண்ணிலா!
தூங்கிய பின்னே
யாரை ரசிக்க வந்தாய்?
எண்ணற்ற விண்மீன்!
எந்த மீனுக்கு
தூண்டில் போட வந்தாய்?

வானில் முளைத்த
வெளிச்சப்பூவே!
வசந்தங்கள் வீசும்
மங்கைப்பூ என் மங்கை!

வேறுநிலா ஏதும் இல்லை!
வான் அழகி ஆனாய் நிலவே!
ஆச்சர்யமில்லை!
பெண்ணே அழகியே!
பெருந்திரள் பெண்ணழகியுள்
பேரழகியே என் நிலவே!

அந்திமாலையே குளமே
நீயே விழவே
வட்டமே! வெள்ளைமுகமே!
தண்ணீர்க்குடமே சுமந்தவளே 
முகமே விழுதே! 
வண்ணமயமானதே!
ஓவியமே! குளமே!

பாரதிகண்ட பெண்ணே நீயே!
ஊர்சுற்றும் தாட்டியமே!
நாணமே நளினமே
நனைந்தே கனிந்தே
மங்கை என் மங்கை!
வீடே வாசலே
கோலமே வெட்கமே
பார்த்தேன்!
நான் பார்த்தேன்!

கதிரில் களவாடிய வெளிச்சமே
வெள்ளொளியே வெண்ணிலவே!
அது குறைவே!
தீபத்தில் பளிச்சிடும் மேனியே
மஞ்சளே அழகே!
அது அதிகமே!

நானே நடந்தே
நகர்வாய் நிலவே!
பாதையே
பாயே விரித்தே
பார்வையே!
என் பார்வையே!
பாவையின் பாதமே படவே
பயணப்படுமே என் பாதமே!
பாவையின் பாதமே பாதையே!

ஆகவே
அழகியே நீயுமே!
ஆனாலுமே
அவளே பேரழகியே!

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...