Sunday, January 21, 2018

அழகிய தேவதை

அழகிய தேவதை

பூபூத்த ஆடைமயில் வேனிலென்னில் தென்றல்
கமகமத்த மஞ்சள்குளி மஞ்சள்முகம் மஞ்சள்மேகம்
இமையசைவு வளர்பிறை தேய்பிறை விழிநிலவு
நெளிவிடை வளைவிதழ் அமைவிலவள் தேவதை

மெலிவுடல் கிழிவுடல் பெண்வருகை தடுமாறிட
அழகியில்விழ முகமேகம் கதிரவனாய் தீயாகிட
தலைகீழ்வினை அழகிவிழ அழுக்குமுகம் புன்னகையே
என்மனத்தீர்வு அழகியதேவதை அழுக்கிலும் இருக்கும்

-சரவணபெருமாள்

("கம்பன் கவிக்கூடம்" முகநூல் குழுமம் "அழகிய தேவதை" என்ற தலைப்பில் நடத்திய குறுங்கவிதைப்போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளது
நாள்: 09/01-01-2018)

Saturday, January 6, 2018

கட்சி

கட்சி

எத்தனையோ கட்சியடா நாட்டுக்குள்ளே
         எத்தனெல்லாம் தலைவனடா கட்சிக்குள்ளே
நெல்லறுக்கப் போகிறவன் கோவணமே
          அதையும்விட கட்சிக்கொடி மிகநீளமே
கட்சிக்கெல்லாம் தலைமையகம் கோட்டைபோலே
         வாழுகிறார் இன்னும்பலர் வீதிமேலே

எத்தனையோ கழகங்களும் மாறிமாறி
         நாற்காலியைத் தேய்த்ததுவே ஏறிஏறி
கழகங்களில் கலகங்கள் நாறிநாறி
         மானங்கெட்டுப் போனதுவே கப்பலேறி
பிறந்தநாளைக் கொண்டாடும் ஊதாரி
         விவசாய இழப்பீட்டில் கஞ்சனாகி

உள்ளாட்சித் தேர்தலிலே விலகிநின்றார்
         சட்டமன்றத் தேர்தலிலே தழுவிக்கொண்டார்
அடுத்துவரும் தேர்தலிலே முட்டிக்கொள்வார்
         அடுத்தடுத்த தேர்தலிலே அணைத்துக்கொள்வார்
முன்தேர்தல் ஊழல்வாதி என்றுசொல்லி
         மறுதேர்தல் நண்பரென்று விருந்துகொள்வார்

ஏழையெல்லாம் உறுப்பினராம் பசிக்கட்சி
         ஏருழுது நெல்லறுத்தும் பசித்தகட்சி
ஆண்டதும் ஆள்வதும் பலகட்சி
         சாகாமல் வாழ்வது வறுமைக்கட்சி
கடன்சலுகை அறிவிப்பு தரும்கட்சி
         கடன்தந்து பங்கெடுத்துக் கொளும்கட்சி

தம்சாதி ஆதரவைப் பெறமுனைந்து
         ஏழைசாதி பசியாற்றும் பணிமறந்து
சாதிச்சாயம் பூசப்பட்டு சிலதலைவர்
         பெயர்சூட்டும் நாடகத்தில் கட்சித்தலைவர்
சாதியிலும் வீதியிலும் பலர்கட்சி
         துவங்கியதே சாதிவளர்ப்புப் பண்ணைக்கட்சி

சாதியிலே கட்சிபல துவக்கிக்கொண்டார்
         சாதிசொல்லித் தம்வயிறை நிரப்பிக்கொண்டார்
தமிழனென்று கட்சிசிலர் தொடங்கிக்கொண்டார்
         மொழிவடிவில் வேற்றுமையை வளர்த்தும்விட்டார்
தமிழ்த்தாயை விலைமாது போலாக்கும்
         கட்சிகளை கண்டறிந்து கழுத்தறுப்போம்

-  சரவணபெருமாள்

Tuesday, January 2, 2018

மரம்


ம்

மனிதன் வாழவே ஓ… மடிந்து போனதே
மனிதன் வாழவே ஓ… மடிந்து போனதே
நிழல்தரும் மரமெல்லாம் அறுத்து போட்டதால்
மழை இல்லை பயிரும் இல்லை
ரெண்டும் இன்றியே பஞ்சத் தொல்லையே
மழை இல்லை பயிரும் இல்லை
ரெண்டும் இன்றியே பஞ்சத் தொல்லையே
மனிதன் வாழவே ஓ… மடிந்து போனதே


சாலை ஓரம் உயர்ந்த மரமெல்லாம் போச்சே
நான்கு வழிச் சாலை அரளிச்செடி ஆச்சே
நெல் முளைத்த பூமி அனைத்திலும் வெற்றிடம் ஓ… வெற்றிடம்
காண வில்லை குளங்கள் எங்கிலும் கட்டிடம் ஓ… கட்டிடம்
சோறு விளைந்த பூமி அது நோயில் விழுந்ததே
சோறு விளைந்த பூமி அது நோயில் விழுந்ததே
மனிதன் செயற்கை சொன்ன பாடம் பஞ்சமே


மனிதன் வாழவே ஓ… மடிந்து போனதே
மனிதன் வாழவே ஓ… மடிந்து போனதே


சிட்டு பட்டாம் பூச்சி இனங்கள் எங்கே?
கை பேசி கோபுரம் அழித்தது இங்கே!
ஆடம்பர வாழ்க்கை அழித்ததே இயற்கை நம் இயற்கை
உண்ணுகின்ற உணவு உற்பத்தி செயற்கை நம் செயற்கை
மூச்சுக் காற்றும் மழையும் தரும் மரங்கள் நடுவோமே
மூச்சுக் காற்றும் மழையும் தரும் மரங்கள் நடுவோமே
இயற்கை மீட்டே எதிர் காலம் காப்போமே


மனிதன் வாழவே ஓ… மடிந்து போனதே
மனிதன் வாழவே ஓ… மடிந்து போனதே
நிழல்தரும் மரமெல்லாம் அறுத்து போட்டதால்
மழை இல்லை பயிரும் இல்லை
ரெண்டும் இன்றியே பஞ்சத் தொல்லையே
மனிதன் வாழவே ஓ… மடிந்து போனதே

- சரவணபெருமாள் 
ராகம்:
படம்:   அன்புள்ள ரஜினிகாந்த்
பாடல்:  கடவுள் உள்ளமே

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...